22nd October 2021

பெண்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள திருமணமான அரசு பெண் ஓட்டுநர்!

மயிலாடுதுறை, மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ரம்யா . ஐடிஐ படித்துள்ள இவர் 2015-ஆம் ஆண்டு நான்குசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றார். மளிகைக்கடையில் வேலை பார்த்துவந்த இவர் 2019ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டார். பணிக்கான ஆணை வழங்கப்பட்டு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு டிரைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முதல்பெண் ஓட்டுநராக ரம்யா பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமிக்கு டிரைவராக பணிபுரியும் ரம்யா உற்சாகத்துடன் தன் ஓட்டுநர் பணியை மேற்கொண்டு வருகிறார். அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய ரம்யாவின் தன்னம்பிக்கை அனைவரின் பாராட்டை பெற்று பெண்களிடையே தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மிகையாகாது.

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page