6th December 2020

மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 20 ஏக்கர் நிலம் தயார் நீடூர் ஜமாத் ஒப்புதல்

நாகை மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அதற்கான இடத்தை நாகப்பட்டினத்தில் உள்ள ஒரத்தூர் பகுதியில் 22 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து நாகை மாவட்ட கலெக்டர் தமிழக அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ளார் இத்தகவல் வெளியாகி வெளியானதிலிருந்து பல்வேறு அமைப்பினர் பாமக டாக்டர் ராமதாஸ் உட்பட மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறை பகுதியில் தான் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்பு கழக தலைவர் டாக்டர் ராஜசேகர் மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறை பகுதியில் தான் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நாகைமாவட்டம் எல்லையில் மயிலாடுதுறை கோட்டம் நாகை கோட்டம் என நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் நாகை கோட்டம் என இரண்டாக உள்ளது நாகப்பட்டினம் மாவட்டம் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்ததால் அதற்கு ஒரு பகுதியாக உள்ளது போல் மயிலாடுதுறை அமைந்துள்ளது அதாவது நிலவியல் ரீதியாக தொடர்பு இல்லாத மயிலாடுதுறை காரைக்கால் மாவட்டத்தை தாண்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த மயிலாடுதுறை என்பது நாகை மாவட்டத்தின் ஒரு பகுதி என்பதை பூகோள ரீதியாக ஒத்து வரவில்லை என்பதை பூகோள ரீதியாக ஒத்துவரவில்லை மாவட்டம் பிரிக்கப்பட்ட போதே மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க கோரி கடந்த 20 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது ஒரு மாவட்டத்திற்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் அத்தனை வசதிகளும் நாகப்பட்டினம் என்ற ஒரு 100 க்கு மட்டுமே கிடைத்துள்ளது இதேபோல் இதை அதே பகுதியில் உள்ள ஒரு சில ஊர்கள் அனுபவித்து வருகின்றனர் உதாரணமாக அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்ட தலைமை மருத்துவமனை ஆனால் அதே மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதி மக்கள் எவரும் அங்கே போய் சிகிச்சை பெற்றது கிடையாது அதே போல மீன்வள பல்கலைக்கழகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் என அனைத்து வசதிகளும் நாகப்பட்டினத்தில் மாவட்ட மக்கள் அனுபவிக்க அளித்த எந்த வசதிகளும் மயிலாடுதுறை பகுதிக்கு ஒதுக்குவது கிடையாது இப்பகுதி மக்கள் அனைத்திற்கும் அலைந்து திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை கூட நாகப்பட்டினத்தில் அமைக்க அதிகாரிகள் முயற்சி செய்து முயற்சித்து வருவது வேதனை அளிக்கிறது நாகப்பட்டினத்திற்கு அருகில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் திருவாரூர் மருத்துவமனை நாகப்பட்டினத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் காரைக்கால் மருத்துவமனை நாகப்பட்டின தனது 87 கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி எப்படி நாகப்பட்டினத்தை சுற்றி அனைத்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளன உள்ள நிலையில் மயிலாடுதுறை மயிலாடுதுறை பகுதி மக்களுக்கு என அருகில் எந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ எந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இல்லை போராடி வாதாடி மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு சில வசதிகளை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கொண்டு வந்துள்ளார் அதுவும் தலைமை மருத்துவமனைக்கு ஈடாக பகுதி மட்டுமே வந்துள்ளது தேவையான மருத்துவர்கள் கிடையாது அவசர சிகிச்சை என்றால் மயிலாடுதுறையிலிருந்து 41 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாரூர் செல்ல வேண்டும் அல்லது 75 கிலோ மீட்டர் தூரமுள்ள தஞ்சைக்கு செல்லவேண்டும் இந்நிலையில் நாகப்பட்டினத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைத்தால் எந்த நோயாளிகள் அங்கே செல்வார்கள் என்று தெரியவில்லை நிச்சயம் மயிலாடுதுறை பகுதி மக்கள் 65 கிலோமீட்டர் தூரமுள்ள நாகைக்கு செல்லமாட்டார்கள் அருகே உள்ளது தான் செல்வார்கள் நாகையில் மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டால் எந்த நோக்கத்திற்காக மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது அதன் நோக்கம் பாழ்பட்டுப் போகும் நாகப்பட்டினம் கோட்டத்தில் உள்ள மக்கள் தொகை கையை விட கூடுதலாக 2 லட்சம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் நாகப்பட்டினத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் இருந்தும் அங்கே செல்லும் வெளி நோயாளிகள் எண்ணிக்கை மக்கள் பிரச்சனை இல்லையே இதற்கிடையே மயிலாடுதுறையை அடுத்த நீடூர் ஜமாஅத் பொறுப்பாளர்கள் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு தேவையான 20 ஏக்கர் நிலத்தை நாங்கள் அளிக்க தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளனர் இந்த அறிவிப்பை மயிலாடுதுறை மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர் நீடூர் பகுதியில் மருத்துவக்கல்லூரி கொண்டுவந்தால் மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவ கல்லூரி அமையும் இதனால் மயிலாடுதுறை பகுதி மக்கள் அனைவரும் பயன் பெற வாய்ப்பு ஏற்படும் மேலும் மயிலாடுதுறையில் திட்டமிட்ட ரிங் ரோடு அமைத்தால் போக்குவரத்து வசதிக்கு ஏற்றதாக இருக்கும் அத்துடன் நீடு ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது சாலை போக்குவரத்து மற்றும் ரயில் வசதி என்று அனைத்தும் உள்ள மயிலாடுதுறை பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு மூன்று எம்எல்ஏக்கள் உடன் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply