மயிலாடுதுறை அருகே 1லட்சத்து 27 ஆயிரம் பணம் பறிமுதல்


மயிலாடுதுறை : சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மேலமுக்கூட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது 1 லட்சத்து 27 ஆயிரம் பணம் பறிமுதல்.
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் அருகே மேலமுக்கூட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது மயிலாடுதுறையிலிருந்து சென்னை நோக்கி சென்ற TATA ACE வாகனத்தை சோதனை செய்த போது, மயிலாடுதுறையை சேர்த்த பரகத் அலி என்பவர் எடுத்து சென்ற.லட்சத்து 27 ஆயிரம் பணம் எந்தவித ஆவணமும் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்து சீர்காழி வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.