25th February 2021

பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த 1 லட்சம் விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் மூன்று மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில்,பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரமாண்டமான போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் வடக்கு பஞ்சாப் பகுதியே குலுங்கியது.

டெல்லிக்கு வெளியே நடத்தப்படும் போராட்டத்தில், வரும் சனிக்கிழமை பஞ்சாப் மாநில விவசாயிகளையும் இணைத்துக்கொள்ள விவசாய சங்கத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே பல சுற்றுகளாகச் சமரசப் பேச்சு நடைபெற்றுள்ளது. ஆனால், விவசாயிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அதனால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts