10 நிமிடங்களில் அருமையான உருளைக்கிழங்கு கிரேவி


தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 2
வெங்காயம் – 1
தக்காளி -1
எண்ணெய் தேவையான அளவு
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை :
1. குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
2. எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
3. கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
4. வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின் தக்காளி சேர்க்கவும்.
5. நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் சேர்க்கவும்.. சேர்த்தபின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 – 5 விசில் விடவேண்டும்.
Note :- தண்ணீர் அதிகம் இருந்தால் விசில் வந்த பிறகு 2 -3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.