108 ஆம்புலன்ஸ் பராமரிப்பில் அலட்சியம்  கூடாது ! சமூகஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

108 ஆம்புலன்ஸ் வாயிலாக  லட்சக்கணக்காணோருக்கு அவசர உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  பெரும்பாலும்  சாலை விபத்துகளில் சிக்கியவர்கள், கர்ப்பிணிகள், மாரடைப்பு ஏற்ப்பட்டவர்கள் அதிக அளவில் 108  சேவையைப் பயன்படுத்தியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில், ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ. நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. மொத்தம் 942 ஆம்புலன்ஸ் வாகனங்கள்  இயக்கப்படுகின்றன. அதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவை தவிர 41 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. நாட்டிலேயே சாலை விபத்துகள் அதிகம் நேரிடும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மாநிலத்தில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நேர்ந்துள்ளன. அவற்றில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் சாலை விபத்துகள் நேரிடும்போது அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களே அழைக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 16 அவசர ஆயிரம் அழைப்புகள் 108 உதவி மையத்துக்கு வருகிறது.

பொதுவாக, அழைப்பு வந்த குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் அவசர உதவி தேவைப்படுபவர்கள் இருக்கும் இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து செல்ல வேண்டும். அதன் காரணமாக, விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்பட மாநிலத்தின் 900-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில்,  கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த புதுப்பட்டு  பகுதியை சார்ந்த  கர்ப்பிணி பெண்  ஜெயலட்சுமி  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பிரசவத்துக்காக  10.06.2021அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். கர்ப்பிணியுடன் செல்வி, அம்பிகா என்ற இரு உறவினர்களும்; ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரும் உதவிக்காக உடன் சென்றுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸில் டிரைவர் உட்பட பெண் உதவியாளர் ஒருவரும் உடன் இருந்திருக்கிறார்கள். ஆலத்தூர் ஏரிக்கரைப் பகுதியில் சென்றபோது, ஆம்புலன்ஸின் டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கர்ப்பிணி ஜெயலட்சுமியின் உறவினர்களான செல்வி, அம்பிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவம் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியதைப்போல தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் சேவை எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி ஆம்புலன்ஸ் மோதிய விபத்து  போல சில சம்பவங்கள் நடைபெற்று பல நோயாளிகள் பலியாகி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட விபத்துகளுக்கு முக்கிய காரணம் ஆம்புலன்சில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளும், போதிய அளவிற்கான பராமரிப்பு இன்மையும் ஆம்புலன்ஸ் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றின் குறைபாடுகளே காரணமாகுமென்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

அவசர கால ஊர்தி என்பதால் பராமரிப்பு மிகமிக முக்கியமானதாகும். எதிர்காலத்தில் ஆம்புலன்ஸ் ஆக்சிடென்ட் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது  மிக முக்கிய கடமையாகும். ஆம்புலன்ஸ் பராமரிப்பில் கவனக்குறைவும் அலட்சியமும் இன்றி, உடனுக்குடன் சரிசெய்து  புனிதமான  பாதுகாப்பான  சேவை தொடர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page