108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை: பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ரேவதி(21). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்ததைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸில் அய்யங்கார்குளம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரேவதிக்கு வலி அதிகமானது.உடனே, 108 ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸிலேயே ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் காஞ்சிஅரசு தலைமை மருத்துவமனையின் பிரசவ வார்ட்டில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளனர். இரவு நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஊழியர்களை அதிகாரிகள் பாராட்டினர்.

SOURCE

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page