26th October 2021

‘பிரபல யூடியூபர் நாகை மீனவன்’ படகில் இருந்து 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

யூடியூபில் நாகை மீனவன் என்று பிரபலமாக அறியப்படும் குணசீலன் என்பவரது படகில் இருந்து 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆய்வாளர் மாசிலாமணி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடி நாரிழை படகு ஒன்றில் மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக படகில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், படகில் இருந்த 15 கிலோ கஞ்சா கொண்ட 10 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதே போல, 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், யூடியூபில் நாகை மீனவர் என்ற சேனலை நடத்திவரும் குணசீலன்(26) என்பவரது படகில் கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. யூடியூப் சேனலை நடத்துவதாக கூறி ஃபைபர் படகை கஞ்சா கடத்துவதற்கு அவர் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page