22nd October 2021

தமிழகத்தில் 17 லட்சம் ‘டோஸ்’ கையிருப்பு !

தமிழகத்தில் 17 லட்சம் ‘டோஸ்’ கையிருப்பு :

தமிழகத்தில் தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 38 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிப்பதால், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்; அதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என, பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இந்திய மருத்துவ சங்கமும், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனால், நான்கு நாட்கள் தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திருவிழா, தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் உட்பட, 5 ஆயிரம் மையங்களில் நேற்று (ஏப்.,11) துவங்கியது. மக்கள் ஆர்வமுடன் சென்று, தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தினமும், இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விழா, 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பணியாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, சுகாதாரத்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று, தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘தமிழகத்தில் தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை; 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன’ என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

Source : தினமலர்

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page