25th September 2021

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

ஆசிரியர்களுக்கான இணையவழி அடிப்படை பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இணையதள கணினி வழி அடிப்படை பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடத்தப்படுகிறது என கூறினார். 75,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என பேட்டியளித்தார். 2.04 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் எனவும் கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சி அமைத்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அன்பில் மகேஷ் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஒரு காரணமாக இருந்தாலும், கொரோனா பேரிடர் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டதே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த திமுக தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசியர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கான இணையதள கணினிவழி அடிப்படை பயிற்சி வகுப்பு 5 நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page