கஜா புயல் உதவி – காவிரி குழுமம்

Share this

காவிரி குழுமம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர், நாகை, வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு சிறு உதவியாக இன்று மெழுகுதிரி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர், நாகை, வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் உணவு உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு மெழுகுதிரி அதிகளவில் தேவைப்பட்டது

பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் செய்தியாளர்கள் மூலம் வந்த தகவலையடுத்து, காவிரி குழும தலைவர் கோமல் அன்பரசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அப்பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக இன்று மெழுகுதிரி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை பல் மருத்துவர் இராஜசிம்மன், திரு.ராஜூ ஜெயின், காவிரி குழும நிர்வாகிகள் சிவக்குமார், அகஸ்டின் விஜய், வழக்கறிஞர் சிவச்சந்திரன், சுந்தர், டிரீம்ஸ் ரவிக்குமார், யோகேஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.

செய்தி & படங்கள்
சு.குணா
செல் : +91 8608508353

Leave your comment
Comment
Name
Email