புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை

Share this
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கவும், மேலும் தனியாரிடம் இடத்தை வாங்கி இலவச வீட்டு மனைகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் தகுதி உள்ள நபர்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கவும், ஆறு மாதங்களில் அதற்கான சிறப்பு வரன்முறை திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமாக வீடு வழங்கவும், ஆக்கிரமிப்புகளை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், கிராமங்களில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது ஊரக பகுதிகளில் உள்ள நீண்டகால ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளை அகற்வும் அதற்கான மாற்று இடம் தேர்வு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும் சிறப்பு வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்தின் கீழ், நீர்நிலை, மேய்ச்சல் மற்றும் சாலை போன்ற இடங்களில் உள்ளவர்களை அப்புறப்படுத்தி, மாற்று இடம் வழங்குவது, ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பு மூலம் 5 ஆண்டுகள் ஆக்ரமணம் செய்துள்ள தகுதியிள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவது உள்ளிட்ட நொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்கவும், மேலும் தனியாரிடம் இடத்தை வாங்கி இலவச வீட்டு மனைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வரன்முறை திட்டத்தை 6 மாதத்தில் செயல்படுத்த வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SOURCE : News18 Tamilnadu

Leave your comment
Comment
Name
Email