மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா ரேஸ் நடத்த அரசு அனுமதி இல்லை

Share this

மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா ரேஸ் நடத்த அரசு அனுமதி இல்லை

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் வருகின்ற 17ம்தேதி காணும்பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா ரேஸ் நடத்த அரசு அனுமதி இல்லை என்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி தகவல்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சியினர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பங்குபெற்ற பேச்சுவார்த்தையில் விழாக்குழுவினர் கலந்து கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. அனுமதியில்லாமல் பந்தயம் நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் தேன்மொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave your comment
Comment
Name
Email