மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில் களைகட்டிய 2.0 சமத்துவ பொங்கல் திருவிழா

Share this

மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில் களைகட்டிய 2.0 சமத்துவ பொங்கல் திருவிழா. பெற்றோர்கள்,மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை,சித்தர்காடு எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 2.0 என்ற தலைப்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் சங்கமித்த 2.0 பொங்கல் விழாவில் கலாச்சார உடைகள் அணிந்து கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட மண்ணின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.

மண்ணின் கலைகளோடு, பாரம்பரிய பெருமைகளை உணர்த்தும் வகையில் நடைபெற்ற எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியின் 2.0 சமத்துவ பொங்கல் விழா பாராட்டுக்குரியது.

செய்தி: குணசீலன் – 8608508353

Leave your comment
Comment
Name
Email