காய்கறிகளைக்கொண்டு வித விதமான சிற்பங்களை செய்து அசத்திய பெற்றோர்கள். உறவுகளின் உன்னதத்தை வெளிப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை அழகுஜோதி அகாடமியில் நடைபெற்ற காய்கறி சிற்பம் செதுக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு.

Share this

நாகப்பட்டினம், மயிலாடுதுறை அழகுஜோதி அகாடமியில் உறவுமுறையின் உன்னதத்தை வெளிப்படுத்தும் வகையில் காய்கறி சிற்பம் செதுக்கும் போட்டி நடைபெற்றது.

பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த போட்டிக்கு பள்ளி தலைவர் கண்ணன் தலைமை வகித்தார், தாளாளர் சிவகுமார், முதல்வர் நோயல் மணி முன்னிலை வகித்தார்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை உள்ளீடு செய்தும், செதுக்கியும் பல்வேறு உருவங்களை போட்டியாளர்கள் படைத்தனர். அழகிய மலர்கள், பறவைகள், பூந்தொட்டிகள், ஊர்திகள் போன்ற வடிவங்களில் காய்கறிகள் பிரமித்தன.

மாணவர்களின் புத்தாக்க சிந்தனையோடு பெற்றோர்களின் கைவண்ணத்தில் காய்கறி சிற்பங்கள் விறு விறுவென உருவாகின.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட சமூகம் சார்ந்த படைப்புகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

தேர்வு செய்யப்பட்ட படைப்பாளர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி & படங்கள்: குணசீலன் – 8608508353

Leave your comment
Comment
Name
Email