தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றிய அழகுஜோதி அகாடமியின் சமத்துவ பொங்கல் விழா. பாரம்பரிய நடனமாடி அசத்திய மாணவர்கள்

Share this

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகில் மேலையூரில் உள்ள அழகுஜோதி அகாடமியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

 

பாரம்பரிய பெருமைகள்கொண்ட தமிழர்களின் கலாச்சாரத்தை மாணவர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராமத்து வீடு, ஏர் கலப்பை , உழவு மாடு ஆகியவற்றின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

 

பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

மண் வாசனையோடு மகிழ்ச்சி பொங்க நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளி தலைவர் கண்ணன், தாளாளர் சிவகுமார், முதல்வர் நோயல் மணி மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

 

செய்தி & படங்கள் : குணசீலன் – 8608508353

Leave your comment
Comment
Name
Email