பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பெருமைப்படுத்திய மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம்

Share this

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் உலக மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சங்கத்தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தன்னிகரற்ற திறமையால் தனக்கென தனிப்பாதை அமைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் சாதனை பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

   

இதில் மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றிவரும் வைத்தீஸ்வரன் கோவில் கால்நடை மருத்துவர் ரமா பிரபாவுக்கு “கருணைச்செம்மல்” விருதும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் மயிலாடுதுறை சார்கருவூல அலுவலர் ராஜலெட்சுமிக்கு “கருவூல கதிரொளி” விருதும், வணிகத்துறையில் நேர்த்தியாக பணியாற்றி வரும் கிங்ஸ் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் பாவை சுகுமாருக்கு “துகில் அரசி” விருதும் வழங்கப்பட்டது.

மேலும் சட்டத்துறையில் எழுச்சியுடன் பணியாற்றி வரும் வழக்கறிஞர் அருணாவுக்கு “நீதியின் நாயகி” விருதும், கலைத்துறையில் உன்னத பணியாற்றி வரும் மயிலை சப்தஸ்வரங்கள் குழுமத்தின் நிர்வாக அலுவலர் நர்மதாவுக்கு “நுண்கலை ஆச்சார்ய திலகம்” விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பெண் சாதனையாளர் விருதுகளை மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்லபாண்டியன் விருதாளர்களுக்கு வழங்கி அவர்களின் ஆற்றல்மிக்க  பணிகளை பாராட்டி பெருமைப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின்  துணைவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடுகளை கிங்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி : குணசீலன் – 8608508353

 

  • Prema

    Prema

    22nd March 2019

    Great supper

Leave your comment
Comment
Name
Email