தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? உளவுத்துறை அதிர்ச்சி தகவல்! காவிரிக்கதிர்

Share this

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில பர,பர கருத்துக் கணிப்பு

‘திசிவோட்டர் மற்றும் ஐஏஎன்ஸ்’ செய்தி நிறுவனம் இணைந்து, 2-வது கட்ட மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை நடத்தியது. 543 தொகுதிகளில் உள்ள 70 ஆயிரம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்திரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த போட்டியால், உ.பியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த முறை 80 இடங்களில் 72 இடங்களில் வென்ற பாஜக கூட்டணி இந்த முறை 28 இடங்களை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.

பீஹார் மாநிலத்தில் 52.6 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெறும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி இணைந்து 40 தொகுதிகளில் 36 இடங்களை கைப்பற்ற முடியும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 50.7 சதவீத வாக்குகளுடன், 25 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தபோதிலும் கூட மக்களவைத் தேர்தலில் அதிகமான இடங்களைப்பெறக்கூடும். மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில் பாஜகவும், 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெல்லக்கூடும்.

இந்த ஒரு மாநிலங்களிலும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போதிலும் அங்கு காங்கிரஸ் கட்சி பெரிய அளவுக்கு வெற்றிபெறாது எனத் தெரியவந்துள்ளது.

பாஜக வலுவாக இருக்கும் குஜராத் மாநிலத்தில் 58.2 சதவீத வாக்குகளை பாஜக பெரும். மாநிலத்தில் உள்ள 26 இடங்களில் 24 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றும் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் 48.1 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெறக்கூடும்.

ஹரியானாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 42.6 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும். இங்குள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெல்ல சாத்தியம் உண்டு.

தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக கூட்டணி மிகவும் பலவீனமடைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி 35.8 சதவீத வாக்குகளைப் பெற்றபோதிலும் பாஜக கூட்டணி 8 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. மீதமுள்ள 31 இடங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி 44.4 சதவீத வாக்குகளுடன் 31 இடங்களைக் கைப்பற்ற முடியும்.

கேரள மாநிலத்தில் பாஜக 19.6 சதவீத வாக்குகள் பெற்றாலும், அங்குள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியைக் கூட பாஜகவால் வெல்ல முடியது.காங்கிரஸ் கட்சிக்கு 46 சதவீத வாக்குகளும் 17 இடங்களும் கிடைக்கக்கூடும், மார்க்ச்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயகக் கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே கடுமையாக போட்டி இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இங்குள்ள 28 தொகுதிகளில் 44.2 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக 15இடங்களையும், 43 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும் வெல்லலாம்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மொத்தமுள்ள 17 இடங்களில் 16 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி ஒரு இடத்திலும் வெல்லும்.வாக்கு சதவீதத்தில் 42 சதவீதத்தை டிஆர்எஸ் கட்சி பெரும் , காங்கிரஸ் கட்சி 28 சதவீதத்தைப் பெற்றாலும் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாது.

ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகளில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சிக்கு 15 இடங்களும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கலாம் .இங்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு எந்தவிதமான தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பில்லை.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இருக்கக்கூடும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 41.6 சதவீத வாக்குகள் பெற்று 42 தொகுதிகளில் 34 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புண்டு. 35 சதவீத வாக்குகளைப் பெரும் பாஜக கூட்டணி 8 இடங்களைப் பெறக்கூடும். காங்கிரஸ் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கு எந்த இடமும் கிடைக்காது எனத் தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 இடங்களில் ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி 11 இடங்களையும், பாஜக 10 இடங்களையும் கைப்பற்றக்கூடும்.

இதேபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களையும், பாஜக 10 இடங்களையும் கைப்பற்றக்கூடும்.

இதேபோல டெல்லியில் உள்ள 7 தொகுதியிலும் பாஜகவே மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது.இதில் காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் 4 இடங்களையும்,  பாஜக 3 இடங்களிலும் வெல்லக்கூடும்.

SPONSERED ADVERTISEMENT

SPONSERED ADVERTISEMENT

SPONSERED ADVERTISEMENT

ஒருவேளை தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்(10இடங்கள்), டிஆர்எஸ் கட்சி(16),பிஜு ஜனதா தளம்(10),மிசோ தேசிய முன்னணி ஒரு இடம், ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உண்டு இந்த கட்சிகள் மூலம் 36 இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

தேர்தலுக்கு முன் பாஜக மிகவும் சாதுர்யமாக மஹாராஷ்டிராவில் சிவசேனா, அசாமில் போடோலாந்து மக்கள் முன்னணி, பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம், தமிழகத்தில் அதிமுக, உ.பியில் அபினாத்தலாம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணி மூலம் பாஜகவுக்கு கூடுதலாக 47 இடங்கள் பெறக்கூடும்.

நன்றி : காவிரிக்கதிர் மாத இதழ்

 

Leave your comment
Comment
Name
Email