நீடுர் நஸ்ருல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

Share this

நாகை மாவட்டம், நீடுர் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ராமன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் நஜிமுதீன் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் குமார் வரவேற்புரையாற்றினார்.

தீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குனர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கே.ஜி.பிரிவு பொறுப்பாசிரியர் அம்பிகை விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியை புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை சுபாஷினி நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி : குணசீலன்

தொடர்புக்கு : 8608508353

__________________________________

RAGAVENDRA NAGAR
ADVERTISEMENT
RAGAVENDRA NAGAR
ADVERTISEMENT
  • Augustin

    Augustin

    6th April 2019

    Good

Leave your comment
Comment
Name
Email