பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சலகங்களில் வேலைவாய்ப்பு

Share this

இந்திய அஞ்சல் துறை 22 அஞ்சல் வட்டங்கள், 4 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களுடன் நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக செயல்படுகிறது. கடிதங்கள், பார்சல் சர்வீஸ், இஎம்எஸ், டெலிவரி, ப்ரைட் பார்வேடிங், தேர்டு பார்ட்டி லாஜிஸ்டிக்ஸ், பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல பணிகளுடன் நவீனமாக அஞ்சல் துறை வளர்ந்துவருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் 4,442 பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் கிளை தபால் அதிகாரி, உதவி தபால் அதிகாரி, தபால்காரர் போன்ற பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:

அஞ்சலகப் பணிகளில் சேர விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி (கணிதம், ஆங்கிலம் முக்கியம்) பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது முதல் 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு வரையில் தமிழைப் பாடமாக படித்திருக்கவேண்டும்.  தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 நாட்கள் அடிப்படை கம்ப்யூட்டர் பயற்சி பெற்றவராக இருத்தல் அவசியம். தகுதிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கிளை தபால் அதிகாரிக்கு ரூ 12,000 முதல் ரூ. 35,480 வரையும் உதவி தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் போன்ற பணிகளுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 29,380 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் ரூ. 100. தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் தேர்வுக்கட்டணம் கட்டத் தேவையில்லை. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியாக கட்டணத்தைச் செலத்துலாம். ஆஃப்லைன் வழியாக தேர்வுக் கட்டணம் செலுத்துவோர் தலைமை தபால் நிலையத்திலோ, அல்லது அருகில் உள்ள தபால் நிலையத்திலோ செலுத்துலாம்.

விண்ணப்பத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம்,  கையெழுத்து, கணினிச்சான்றிதிழ், சாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் போன்றவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.4.2019

தொடர்புக்கு : 044-28592844

விவரங்களுக்கு : www.indiapost.gov.in

நன்றி : புதிய தலைமுறை கல்வி வார இதழ்

 • Naveen

  Naveen

  13th April 2019

  Like u

 • Naveen kumar

  Naveen kumar

  13th April 2019

  Like all the best

Leave your comment
Comment
Name
Email