மங்கைநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

Share this

நாகை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம், நவ்கார் பிளைவுட்ஸ் நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மங்கநல்லூர் கே.எஸ்.ஓ. உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற முகாமை ரோட்டரி மாவட்ட ஆளுநர் பிறையோன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ராமன், மண்டல செயலாளர் முருகேசன், செயலாளர் துரை, மாவட்ட பொருளாளர் சிவகுருநாதன், மண்டல தலைவர் இளங்கோவன், அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமில் மங்கைநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் _186 பயனாளிகள் கலந்து கொண்டனர் . இதில் 42 பயனாளிகள் கண் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச செல்லப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தினர் செய்திருந்தனர்.

Leave your comment
Comment
Name
Email