உயர் கல்வி கனவை நனவாக்கும் ஆனந்தம்

Share this

12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர் கல்வி படிக்க வசதியில்லாமல் ஆண்டு தோறும் தமிழகத்தில் சுமார் 1லட்சம் மாணவர்கள் படிப்பை கைவிடுகிறார்கள். இதுபோன்ற மாணவ-மாணவியர் உயர் கல்வி பயில 100 சதவீதம் உதவித்தொகை வழங்கிவருகிறது ஆனந்தம்.


மாணவர்கள் தேர்வுமுறை

அரசப் பள்ளிகளில் படித்து 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப்பெற்றும் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்களை ஆண்டுதோறும் ஆனந்தம் அமைப்பு தேர்ந்தெடுக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், தாய், தந்தையை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனந்தம் குழுவினர் நேரடியாக சென்று குடும்ப பின்னணியை உறுதி செய்த பின்னரே தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆனந்தம் சிறப்பம்சங்கள்

  • படிப்பு காலம் முழுமைக்கும் கல்வி கட்டணம், விடுதி, உணவு உள்ளிட்ட அணைத்து தேவைகளுக்கும் ஆனந்தம் பொறுப்பேற்கிறது.
  • ஒவ்வொரு மாணவருக்கும் ஆனந்தம் அமைப்பின் பயிற்சி பெற்ற (Mentor) ஒருவர் வழிகாட்டியாக செயல்படுகிறார்.
  • மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம், ஆளுமைத்திறன் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நற்பண்புகளை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன(Value Education And Life Skill Training).
  • மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பட்டதாரிகளாக மட்டுமின்றி, வாழ்வின் சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு ஆனந்தமாகவும், சமூக அக்கறையுடனும் வாழக்கூடிய சிறந்த மனிதர்களாக மாணவர்களை உருவாக்குவதே ஆனந்தம் அமைப்பின் நோக்கம்.

Leave your comment
Comment
Name
Email