இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி

Share this

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி வில்லேஜ் டெவலப்மெண்ட் சொசைட்டி சார்பில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அறிவாலயம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. காவிரி சொசைட்டி செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் அகஸ்டின் விஜய் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜூலியஸ் தூயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் வழக்கறிஞர் சிவச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.

 

முகாமில் இளைஞர்களின் வளர்ச்சிக்கான தலைமைப் பண்புகள், தனி மனித மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு, கல்வி விழிப்புணர்வு, தன்னார்வ சமூக செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வை. பட்டவர்த்தி, பாலாக்குடி, கொண்டல், வில்லியநல்லூர், செங்குடி, பாண்டூர் உள்ளிட்ட மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர்.

மாயூரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் உமாபதி, கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். முகாமிற்கான ஏற்பாடுகளை காவிரி சொசைட்டியின் தலைவர் கோமல் அன்பரசன் வழிகாட்டுதலின்படி, நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் நிர்வாக அலுவலர் சுந்தர் நன்றியுரையாற்றினார்.

Leave your comment
Comment
Name
Email