இளநீரில் இத்தனை நன்மைகளா…!

Share this

இந்த கோடையினால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க மிகச்சிறந்த பானம் இளநீர். பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள சத்துக்கு இணையானது. மேலும் இளநீரில் எண்ணற்ற மருத்துவ குணகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்:

 • இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
 • பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து.
 • பேதி, சீதபேதி, ரத்தபேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
 • சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் அருமருந்தே இளநீர் தான்.
 • டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரை தாராளமாக குடிக்க வேண்டும்.
 • இளநீர் வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்தும்.
 • அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துகளை உடனே பெறலாம்.
 • சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்கு தக்க வைத்து, சருமத்தைப் பாதுகாக்கும்.
 • இளநீரை பருகினால் வயிறு நிறைந்து போகும். இதுனால் அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவகிறது.
 • இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இருப்பதனாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.
 • இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
 • இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது.
 • உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது.
 • மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல்சூடு தணிக்கப்படுகிறது. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் சக்தி இளநீருக்கு உண்டு.
 • இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இளநீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இரவில் இனிமையான உறக்கத்தை பெருவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது.
Leave your comment
Comment
Name
Email