மயிலாடுதுறை அழகு ஜோதி பள்ளியில் இரத்ததான முகாம்

Share this

உலக இரத்ததான நாளை முன்னிட்டு நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த மேலையூரில் உள்ள அழகு ஜோதி சி.பி.எஸ்.இ பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இரத்த தானம் வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இராம.சேயோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை இரத்த வங்கி அதிகாரி மருத்துவர் சிவக்குமார் இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் அரசு மருத்துவமனையிலிருந்து வந்திருந்த மருத்துவக் குழுவினர் கொடையாளர்களை பரிசோதனை செய்து இரத்ததானம் பெற்றனர்.

இந்நிகழ்வில் பள்ளி தலைவர் கண்ணன், தாளாளர் சிவக்குமார், கல்விப்புல இயக்குனர் கவிதாகண்ணன், பள்ளி முதல்வர் நோயல்மணி, துணை முதல்வர் அமுதா, சமூக ஆர்வலர் அப்பாஸ் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உயிர்காக்கும் இரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் பள்ளியின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். கொடையாக பெறப்பட்ட இரத்தம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக பாதுகாக்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் அவசர சிகிச்சை தேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அழகு ஜோதி அகாடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

Pragathi Oils Mayavaram
Pragathi Oils Mayavaram

 

Leave your comment
Comment
Name
Email