கிராமங்களில் மாணவர்களுக்கு இலவச மேம்பாட்டு மையங்கள் திறப்பு

மயிலாடுதுறையில் காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு சார்பில், ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘கற்றலின் இனிமை மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையம்’ என்ற அமைப்பு முதல் கட்டமாக 4 கிராமங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தொடக்க நிகழ்ச்சிக்கு காவிரி அமைப்பின் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் அகஸ்டின் விஜய், செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சிவச்சந்திரன், குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜூலியஸ் தூயமணி திட்ட விளக்கவுரை ஆற்றினார். நிர்வாக அலுவலர் சுந்தர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தார்.

உடையார்க் கட்டளை மையத்தை மயிலாடுதுறை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இதில் காவிரி இளைஞர் குழுவைச் சார்ந்த ராஜில், தீரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுபாஷினி மற்றும் இலக்கியா ஆகியோர் மையப் பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர். பட்டவர்த்தி மையத்தை மயிலாடுதுறை ரோட்டரி சங்க முன்னாள் பொருளாளர் குருசங்கர் தொடங்கி வைத்தார். காவிரி இளைஞர் குழுவைச் சேர்ந்த கார்த்திகேயன், டெய்சீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவரஞ்சனி மற்றும் நாவன்யா மையப் பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

புலவனூர் மையத்தை மணல்மேடு ஆண்கள் மேனிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் வீதி. முத்துக்கணியன் தொடங்கி வைத்தார். காவிரி இளைஞர் குழுவைச் சார்ந்த ரெங்கராஜ், பிரித்திவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாரியப்பன் மையப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார். மாந்தோப்பு மையத்தை மயிலாடுதுறை பாரதிய ஜெயின் சங்கத் தலைவர் ராஜ்குமார் ஜெயின் தொடங்கி வைத்தார். காவிரி இளைஞர் குழுவைச் சேர்ந்த இளையசந்திரன், சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர். ரூபி மற்றும் சுனிதா ஆகியோர் மையப் பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, காவிரி கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், முதல்கட்டமாக காவிரி அமைப்பு சார்பில் நான்கு கிராமங்களில் மாணவர்களுக்கான கற்றலின் இனிமை மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்களின் கல்வி மற்றும் தனிநபர் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட உள்ளது. இதேபோல், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கற்றலின் இனிமை மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையங்களைத் தொடங்க திட்டமிட்டு வருகிறோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *