மயிலாடுதுறையில் 1டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Share this

மயிலாடுதுறையில் 1டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்;

ரூ.1 1/4 லட்சம் அபராதம்

குடோனுக்கும் ‘சீல்’ வைப்பு

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் தஞ்சை நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் கிருஷ்ணகுமார், துப்புரவு ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து மற்றும் குழுவினர் மயிலாடுதுறை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறை கூரைநாடு கவரத்தெருவில் உள்ள சுரேஷ் என்பவரின் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 1டன் பிளாஸ்டிக் பொருட்களையும் மற்றும் 250 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேசுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுரேசின் குடோன் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

Leave your comment
Comment
Name
Email