பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை

Share this

குத்தால்ம் அருகேயுள்ள மங்கநல்லூர் கே. எஸ். ஓ. நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு சீருடை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல் முன்னிலை வகித்தார். கலைத்தாய் அறக்கட்டளை சார்பில் இப்பள்ளியில் பயிலும் கபடி விளையாடும் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கப்பட்டது. இதில், காவிரி அமைப்பின் துணைத்தலைவர் செள. சிவச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சீருடைகளை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Leave your comment
Comment
Name
Email