அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தானே காலத்தில் இறங்கிய மயிலாடுதுறை அறம் செய் இயக்கம்

Share this

மயிலாடுதுறை கண்ணாரத்தெரு அருகில் மழையால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தை மயிலாடுதுறை அறம் செய் இயக்கமும் சில தன்னார்வலர்களும் இணைந்து சரி செய்தனர்.

அவ்வப்போது மயிலாடுதுறை நகர் முழுவதுமே பள்ளங்கள் ஏற்பட்படி உள்ளது. மயிலாடுதுறை கண்ணாரத்தெரு ஜெனிபிர் ஸ்வீட்ஸ் எதிரில் சில தினங்களுக்கும் முன்பு பெய்த மழையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அனால் இதுவரை அரசாங்கம் அதை சரி செய்யவில்லை. இன்று காலை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் அப்பள்ளத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அறம் செய் இயக்கம் இனிமேலும் தாமதிக்கக்கூடாது என இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அறம்செய் இயக்கத்தினர் ஜெனிபர் பவுல்ராஜ், காவல் துறை அதிகாரி சிவகுமார், ஐ.டி துறை கணேசன், செபாஸ்டின் ஆகியோர் அப்பள்ளத்தை சிமெண்ட், ஜல்லி, மணல் கலவை கொட்டி சரி செய்தனர். எல்லோரை போலும் பள்ளத்துக்காக ஒதுங்கி செல்லாமல் களத்தில் இறங்கி சரி செய்த அறம் செய் இயக்கத்திற்கு மயிலைகுருவின் சார்பில் வாழ்த்துகளும் நன்றிகளும்.

Leave your comment
Comment
Name
Email