வெள்ள அபாயம்; தயார்நிலையில் தீயணைப்புத்துறை

Share this

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயார் நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெல்ல அபாய மீட்டுப்பணிகளை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயார் நிலையில் உள்ளது. வெள்ளத்தில் சிக்கும் நபர்களை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் போதுமான பேரிடர் மீட்பு ரப்பர் படகுகள், மிதவை உபகரணங்கள, நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள், மிக நீளக் கயிறுகள் உள்ளிட்ட அணைத்து உபகரணங்களும் ஊர்திகளுடன், கூடுதலான மீட்பு பனி வீரர்களுடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 21 கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலுள்ள 31 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களிலும் 24 மணிநேரமும் படைவீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் பொதுமக்கள் 101 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comment
Comment
Name
Email