குத்தாலம் ராஜ் வித்யாலயா கல்வி குழுமத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க விழா

Share this

நாகை மாவட்டம், குத்தாலத்தில் 25 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் ராஜ் வித்யாலயா கல்வி குழுமத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.

ராஜ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் இரா.பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஹேமலதா வரவேற்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் ராஜேஸ்வரி, ஸ்ரீகண்டபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், மருத்துவர் அருண்குமார், நிர்வாகப்பிரிவு ஆசிரியர்கள் சாந்தி, உமா, ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் இரா.செல்வம், பட்டிமன்ற நடுவர் மற்றும் நகைச்சுவை பேச்சாளர் ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம், கவிஞர் வீதி.முத்துக்கணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ராஜ் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டு, வெள்ளி விழா கொண்டாட்டத்தின் துவக்கமாக 25-ஆம் ஆண்டு நினைவுச் சின்னம் வெளியிடப்படட்து.


தொடர்ந்து பள்ளி மாணவ – மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு வழி காட்டும் வகையில் கல்வி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சர்வதேச மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார். பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற புத்தாக்க பயிற்சியில் ஜீனியர் சேம்பர் இன்டர்நேஷனல் மண்டல பயிற்சியாளர் செங்குட்டுவன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தார்.

வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழா மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி நிர்வாகப்பிரிவு ஆசிரியை மங்களகௌரி நன்றியுரையாற்றினார். பள்ளி துணை முதல்வர் இளையராஜன், ஆசிரியர்கள் கலாநிதி, சசிரேகா, அபிராமி, சந்திரா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக இயக்குநர் இரா.பாண்டியன் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave your comment
Comment
Name
Email