மயிலாடுதுறையில் நாளை கடையடைப்பு

Share this

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 3) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலூகாவைச் சேர்ந்த மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக உள்ளது மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனை. இம்மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தாலும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாலும், 80 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கோ அல்லது 45 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சரியான நேரத்தில் அவசர சிகிச்சை அளிக்க முடியாமல் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இம்மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க 22 ஏக்கர் நிலத்தை தானமாக தருவதாக நீடூர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனால் இம்மருத்துவக் கல்லூரியை நாகை அருகே ஒரத்தூரில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகைக்கு அருகில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி, காரைக்கால் மருத்துவக் கல்லூரி ஆகியன உள்ளன. எனவே நாகை தாலுகா பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைத்தால் அது மக்களுக்கு பயன்பெறாது. எனவே நாகை மாவட்டத்திற்கு வரவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடத்த உள்ளதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் அண்மையில் வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் துணைத் தலைவர் மதியழகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ. தமிழ்செல்வன், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் எம்.என். ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  வணிகர்கள் டிசம்பர் 3-ஆம் தேதி முழு கடையடைப்பு செய்து ஆதரவு அளிக்க வேண்டுமென்று வணிகர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 • Murali

  Murali

  2nd December 2019

  Mayiladuthurai ah kumbakonam mathiri clean ah ….nalla road …clean public toilet eruthale hospital use koraum

 • Kumaresan

  Kumaresan

  2nd December 2019

  Sup
  இந்த போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நான் இப்போது மகாராஷ்டிரா வில் பணிபுரிகிறேன்….. உங்களின் முயற்சி நாளைய மயிலாடுதுறையின் வளர்ச்சி… நன்றி……

Leave your comment
Comment
Name
Email