தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்; கூடுதல் ஆட்சியர் ஆய்வு

Share this

சீர்காழியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால், தாழ்வான பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மழைநீரை அகற்றும் பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சீர்காழியில் இரணியன்நகர், பாலசுப்ரமணியன் நகர், தெட்சிணாமூர்த்தி நகர், முருகன் கோயில் தெரு, விஎன்பி நகர், கோவிந்தராஜன் நகர், பெத்தடி தெரு, கதிர்வேல் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

நகராட்சி பொறுப்பு ஆணையர் வசந்தன் அறிவுறுத்தலின்பேரில், பல இடங்களில் தேங்கிநிற்கும் மழைநீர் ஜெசிபி இயந்திரத்தின் மூலம் தடைகளை அகற்றி வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரணியன் நகரில் சாலையைத் துண்டித்து குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் தென்பாதி பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் இயக்குனர் பிரசாந்த் ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, வட்டாச்சியர் சாந்தி, பொறுப்பு ஆணையர் வசந்தன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave your comment
Comment
Name
Email