மின்சார ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும்

Share this

தற்போது மயிலாடுதுறையிலிருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் திருவாரூர் வழியாக இருப்புப்பாதை மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் போக்குவரத்து அதிகம் இல்லாமல் முடங்கியுள்ளது. திருவாரூர் வரை அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையை 28 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருத்துறைப்பூண்டி வரை நீட்டிக்க ஏதுவாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும். இதற்கு நிதி ஆதாரமாக ரூ.25 கோடியே போதுமானதாகும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற ரயில்வே மண்டல மேலாளர் அதிகார வரையிலேயே அனுமதி அளிக்க இயலும். திருத்துறைப்பூண்டியில் உள்ள முதியோர் உடல் பாதிப்பு உள்ளவர்கள் இதன்மூலம் சுலபமாக நீண்டதூரம் பயணம் செய்ய முடியும். இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கும் எரிபொருள் மிகவும் சிக்கனமாக செலவாகும். எனவே திருவாரூர் வரை அமைக்கப்பட்டுள்ள்ள அகல ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டத்தை திருத்துறைப்பூண்டி வரை நீடிக்க வேண்டும்.

Leave your comment
Comment
Name
Email