வனத்துறை சார்பில் மாணவர்களுக்கிடையேயான போட்டிகள்

Share this

நாகை மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி, கல்லுரி மாணவர்களுக்கிடையேயான போட்டிகள், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக ஈர நாள் குறித்து மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈர நிலங்களை பாதுகாப்பது எப்படி என்றத் தலைப்பில் பேச்சு,ஓவியம், கட்டுரை மற்றும் விநாடி-வினா போட்டிகள் நடைப்பெற்றன. இதில், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளைச் சேர்ந்த 520 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளை நாகை மாவட்ட வன அலுவலர் கலாநிதி தொடங்கி வைத்துப் பேசியது: நாகை மாவட்டத்தில் ஈர நிலங்களில்தான் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளன.இதனால் இங்கு பல்வேறு நாடுகளிலிருந்து பலவிதமான பறவைகள் வந்து தங்கிச் சென்கின்றன.பறவைகளின் எச்சங்கள் இயற்கை உரமாக நமக்கு கிடைக்கிறது.வெளிநாட்டுப் பறவைகளை காண சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் அரசுக்கு வருமானமும் கிடைக்கிறது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஈர நிலங்கள் இருப்பதால் கடல் நீர் உப்புகாமல் தடுக்க முடிகிறது.

கடற்கரை முகத்துவாரங்களில் ஈர நிலம் இருப்பதால்தான் புல் போன்ற செடிகள் வளர்கின்றன.இதில், சிறிய வகை உயிரினகள் வாழ முடியும்.இந்த உயிரினங்களை உட்கொள்ள ஆமைகள்,மீன்கள் அடிக்கடி வந்து செல்லும். ஈர வகை நிலங்களால் பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன.எனவே,பொதுமக்கள் நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.ஆக்கிரமிப்பு செய்தால் ஈர நிலங்களின் பரப்பளவு குறைந்துவிடும் என்றார் அவர்.நிகழ்ச்சியில்,உதவி வன பாதுகாவலர் ரவிக்குமார்,வன சரக அலுவலர் அயூப்கான்,கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் வனத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave your comment
Comment
Name
Email