மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலகத்துக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பிவைப்பு

Share this

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி, கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திலிருந்து தமிழக தலைமைச் செயலகத்துக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி வியாபாரிகள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கலந்து கொண்டு, அஞ்சல் அட்டைகளை அனுப்பும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வியாபாரிகள் சங்க செயலாளர் ரமேஷ், பொருளாளர் சேகர், துணைத் தலைவர் புருஷோத்தமன், சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம், பொது தொழிலாளர்கள் சங்க சீர்காழி அமைப்பு செயலாளர் கோடங்குடி.சி.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முன்னாள் “எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கூறுகையில், தரங்கம்பாடி, சீர்காழி, கொள்ளிடம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தலைமைச் செயலக அலுவலகத்துக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்படும் என்றார்.

Source : Dinamani

Leave your comment
Comment
Name
Email