நாகை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ‘சீல்’; உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

Share this

நாகையை அடுத்து சிக்கல் அருகே உரிய உரிமம் இன்றி செயல்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கு.வரலெட்சுமி, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.டி.அன்பழகன், எஸ்.மகாதேவன் ஆகியோர், நாகையை அடுத்த சிக்கல், பனைமேடு, அண்ணாநகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் சட்டம் 2011 – இன்படி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பெறவேண்டிய பிஐஎஸ் உரிமம் மற்றும் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம், நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையின்மைச் சான்று ஆகியன பெறாமல் அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூடி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்தனர். உரிய உரிமம் பெறாமல், தரமற்ற முறையில் குடிநீர் தயாரிப்பில் ஈடுப்பட்ட குற்றத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் வரலெட்சுமி தெரிவித்தார்.

Source : Dinamani

Leave your comment
Comment
Name
Email