உளுந்து, பயிருக்குப் பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

Share this

ராபி பருவ உளுந்து, பாசிப் பயிறு மற்றும் எண்ணெய்ப் பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு பெற விவசாயிகள் முனைப்பு காட்டுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் பி.நாயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2019 – 20 ஆண்டில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பாசிப் பயிறு, எல் நிலக்கடலை, கோடை நெல் மற்றும் நெல் தரிசில் பருத்தி ஆகிய பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடன் பெரும் விவசாயிகள், தொடர்புடைய வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பிரீமியம் செலுத்தி, பயிர் காப்பீடு திட்டத்தில் இணையலாம். உளுந்து, பாசிப் பயிறு, நிலக்கடலை ஆகியவற்றுக்கு பிப்ரவரி 15 – ஆம் தேதிக்குள்ளும், எள் சாகுபடிக்கு மார்ச் 16 – ஆம் தேதிக்குள்ளும் , கோடை நெல் , நெல் தரிசில் பருத்தி ஆகிய பயிர்களுக்கு மார்ச் 31 -ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டுப் பதிவுக்கு இறுதி நாள் வரை காத்திருக்காமல், விவசாயிகள் முன்கூட்டியே காப்பீட்டுத் திட்டத்தில் இணையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave your comment
Comment
Name
Email