டிப்ளமோ சிவில் படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! நில அளவை துறை தலைமை இயக்குனர் அறிவிப்பு!

Share this

நில அளவை துறையில் போதிய நில அளவையாளர்கள் இல்லாத காரணத்தால் பணிகள் முடிய காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க டிப்ளமோ சிவில் படித்தவர்களுக்கு மூன்று மாதம் நில அளவை பயிற்சி அளித்து, பிறகு அரசு அல்லாத நில அளவையாளர் (Licensed Surveyor for Non-Government Employee) எனும் புதிய திட்டம் மூலம் நில அளவை பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் புதிய முறையை அரசிடமிருந்து துறை தலைமை இயக்குனர் உத்தரவு பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மூன்றாண்டு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து மார்ச் 2020, மற்றும் ஜூன் 2020, மாதங்களில் துவங்கப்படவுள்ள பயிற்சியில் பங்கேற்க “நில அளவை செய்வதற்கான உரிமை” பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து முழு விபரங்களுக்கு www.tn.gov.in  இணையத்தை காணவும்.

OFFICIAL NOTIFICATION LINK: LAND SURVEYOR TRAINING

Leave your comment
Comment
Name
Email