நந்தியநல்லூர் கிராமத்தில், மயான பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்

Share this

சீர்காழி அருகே அகணி ஊராட்சிக்குள்பட்ட நந்தியநல்லூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக மயான பாதை வசதி இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நந்தியநல்லூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த சமுதாயங்களுக்கு 2 மயானங்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் நந்தியநல்லூர் கமலை ஆற்றுக்கு அப்பால் உள்ளது. இந்த இரு மயானங்களுக்கு செல்லும் பாதை களிமண்சாலையாகவும் , கருவேலமரங்கள் மற்றும் முற்புதர்கள் முளைத்தும் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் கூடாரமாகவும், ஆக்கிரமிப்புகளால் ஒற்றையடி பாதையை விட மிக மோசமாக உள்ளது.
சிறு வாய்க்கால்களும், நீரோட்ட கன்னிகளுக்கும் சிறு பாலங்கள் இல்லாமலும் உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல மிகுந்த சிரமமாக உள்ளது. சாதாரணமாக நடந்து செல்ல கூட தகுதியற்ற பாதையாக உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மழைக்காலங்களில் சேற்றிலும், சகதியிலும் தூக்கி செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் இந்த மயான பாதையை சுத்தம் செய்ய தனியாக ஆள்களை வரவழைத்து கூலி கொடுத்து கிராமங்கள் தங்கள் சொந்த செலவில் சுத்தம் செய்து உயிரிழந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு தூக்கிச் செல்கின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு விறகு, வறட்டி போன்ற பொருள்களை கூலி ஆட்கள் வரவழைத்து அவர்கள் தங்கள் தலையில் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிலையால் ஒன்றுக்கு மூன்று மடங்கு செலவாகிறது. அப்படி கூலி கொடுத்தாலும் ஆட்கள் எங்களால் வரமுடியாது என மறுக்கின்றனர்.
எனவே சிறு வாகனங்கள் செல்லும் அளவுக்கு ஆக்க்கிரமிப்புகளை அகற்றி, நும்மேலி மயான சாலை பாதையிலிருந்து நந்தியநல்லூர் எரியூட்டும் மயானம் வரை 800 மீட்டர் சாலையை சீரமைத்து நிம்மேலி மயான சாலையுடன் இணைப்பை ஏற்படுத்தியும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மயான பாதைகளுக்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கிராமமக்கள் சார்பாக சமூக ஆர்வலர் ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave your comment
Comment
Name
Email