ரத்த சோகை விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

மயிலாடுதுறை சிசிசி சமுதாய கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
போஷன் பக்வாடா எனப்படும் இந்த ஊட்டச்சத்து நிகழ்ச்சி மார்ச் 8 -ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 – ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 4 – ஆம் நாள் நிகழ்வாக ரத்தசோகை விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனர் ஆர்.காமேஷ் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் வி.லட்சுமிபிரபா முன்னிலை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் பா.ராஃபியதுள் ஹதபியா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், ரங்கோலி கோலம் வரைந்து அங்கன்வாடி பணியாளர்கள் நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். முன்னதாக மாணவிகள் அனைவரும் ஊட்டச்சத்து, அதுவே நமது சொத்து என்ற உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில், கீரை, பழங்கள் போன்றவற்றை தினமும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கலாம் என மாணவிகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் அறிவுறுத்தினர். அங்கன்வாடி பணியாளர் ஸ்டாஃபியா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *