ரயில்வே திட்டங்களில் மயிலாடுதுறை தொகுதி புறக்கணிப்பு ; மக்களவை உறுப்பினர் குற்றச்சாட்டு

மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் மயிலாடுதுறை தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எம்பி ராமலிங்கம், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரயில்வே மானியக் கோரிக்கையின் போது குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் பேசியது:

தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி ரயில்பாதை திட்டம் கடந்த 28 ஆண்டுகளாக முடங்கி உள்ளது. 2006-2007 மற்றும் 2010-2011 ஆம் ஆண்டுகளில் தரங்கம்பாடி – காரைக்கால் வழித்தடம் அமைப்பதற்கான சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவையாவும் ஆய்வு என்ற பெயரிலேயே நின்றுவிட்டன.

மயிலாடுதுறை – தரங்கம்பாடி இடையே தொடர்வண்டி இயங்காததால் தினக்கூலி தொழிலாளர்கள், மாணவர்கள் , விவசாயிகள், மீனவர்கள் , அலுவலர்கள், யாத்ரீகர்கள் என அணைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இருப்புப்பாதை புனரமைக்கப்பட்டால் விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு கிடைத்துவிடும்.  இது கடலூர், சிதம்பரம், தரங்கம்பாடி, காரைக்கால் ஆகிய ஊர்களின் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் வட மாநிலத்தவர்களுக்கே பனி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால் எங்கள் மக்கள் மொழி புரியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இக்கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *