ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என வெளியான செய்திகள் பொய்யானது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 621 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இதுவரை கொரோனாவுக்கு பலியோனோர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் இல்லையெனில் ஊரடங்கு உத்தரவு இன்னும் கடுமையாக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுமென, உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் பரப்பப்படும் செய்திகள் தவறானவை. மார்ச் 22ஆம் தேதி சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 21 நாள்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தேவையற்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு, கொரோனாவின் தீவிரத்தால் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரையும் நீடிக்கப்படுமென, உலக சுகாதார நிறுவனம் கூறியதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்தச் செய்திகள் தவறானவை. இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SOURCE: PT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *