கிடங்கல் ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ.எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.

கிடங்கல்  ஊராட்சியில் 600  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம்.எல்.ஏ.எஸ்.பவுன்ராஜ் வழங்கினார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  கிடங்கல்  ஊராட்சியில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிடங்கல் ஊராட்சியில் 600-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் 600-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செம்பை அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரராஜன், கிடங்கல் ஊராட்சிமன்ற தலைவர் அமுதா அன்பழகன், ஊராட்சி செயலர் மாரி தட்சிணாமூர்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் இராமலிங்கம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இரா. யோகுதாஸ்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.

More News

வருமானவரி தாக்கல் – நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம்

admin See author's posts

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதி

admin See author's posts

நாளை முதல் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் திறப்பு

admin See author's posts

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா

admin See author's posts

நீட் தேர்வு செப் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

admin See author's posts

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை

admin See author's posts

அனைத்து திருக்கோயில்களையும் திறக்க தமிழக அரசை வலியுறுத்த ஆதினங்களுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வேண்டுகோள்

admin See author's posts

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

admin See author's posts

ஜேசிஐ மயிலாடுதுறை சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது

admin See author's posts

தமிழகத்தில் இதுவரை 8 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி

admin See author's posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *