மயிலாடுதுறையில் 2,253 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை லீமா ரோஸ் , உதவி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் அலக்சாண்ட்ரா முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள 13 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 858 மாணவர்கள், 1395 மாணவிகள் என 2,253 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், மாணவர்களிடமிருந்து இந்த அரசு எதிர்பாப்பது ஒன்றே தான். அது தான் நல்ல தேர்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலில் நமது மாவட்டம் 25வது இடத்துக்கு சென்றுள்ளதை கண்டு வேதனையாக இருக்கும். இந்த காலகட்டமானது யார் நன்றாக படிக்கிறார்களோ அவர்கள் தான் அரசு வேளைக்கு செல்ல முடியும்.
எந்த வேலையாக இருந்தாலும் அரசு தேர்வு மூலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இடஒதுக்கீடு போன்றவற்றை தாண்டி வேலை கிடைக்க வேண்டுமானால் நல்ல தேர்ச்சி ஒன்று தான் வழி. வரும் கல்வி ஆண்டுகளில் இந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதல் மூன்று இடத்தை அடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணி, அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் மயிலாடுதுறை, பூம்புகார் எம்எல்ஏக்கள், பங்கேற்றனர்.