தமிழகம்-கேரளா இடையே 3 சிறப்பு ரயில்- வரும் 2-ம் தேதி முதல் தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு வரும் கடந்த 7-ம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து புதுடெல்லி, பீகார், கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து ஹவுரா என 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி (நாளை மறுநாள்) முதல் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்குள் 4 ரயில்களும், கேரள மாநிலத்திற்கு 3 ரயில்களும் அறிவித்துள்ளது.

1. சென்னை எழும்பூர்-திருநெல்வேலி (ரயில் எண் 02631) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 5-ம் தேதி முதல் இரவு 07.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 6-ம் தேதி காலை 06.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலி-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02632) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 2-ம் தேதி முதல் காலை 6.35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

2. சென்னை எழும்பூர்- செங்கோட்டை (ரயில் எண் 02661) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 3-ம் தேதி முதல் இரவு 08.40 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4-ம் தேதி காலை 08.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02662) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 4-ம் தேதி முதல் காலை 6.00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 6.10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

3. சென்னை எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02613) இடையே (வியாழக்கிழமை தவிர்த்து )வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் வரும் 2-ம் தேதி முதல் காலை 06.00 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரை-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02614) இடையே (வியாழக்கிழமை தவிர்த்து )வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் 2-ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு அதிகாலை சென்னை எழும்பூர் வந்தடையும்.

4. சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் (ரயில் எண் 02205) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 5-ம் தேதி முதல் மாலை 05.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 6-ம் தேதி காலை 04.25 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் (ரயில் எண் 02206) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 2-ம் தேதி முதல் காலை 07.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

5. சென்னை எழும்பூர்- கொல்லம் (ரயில் எண் 06723) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 3-ம் தேதி முதல் இரவு 08.10 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4-ம் தேதி மதியம் 01.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லம்-சென்னை எழும்பூர் (ரயில் எண் 06724) இடையே தினந்தொறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் 4-ம் தேதி முதல் காலை 08.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

6. சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆழபுலா இடையே தினந்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை சென்ரல்- ஆழபுலா (ரயில் எண் 22639) இடையே இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, ஆழபுலா-சென்னை சென்ரல் ரயில் (ரயில் எண் 22640) இடையே இயக்கப்படுகிறது.

7. காரைக்கால்-எர்ணாகுளம் (ரயில் எண் 16187) இடையே தினந்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, எர்ணாகுளம்- காரைக்கால் (ரயில் எண் 16188) இடையே தினந்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

SOURCE

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts