பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தில் முறைகேடு விவசாயிகள் அல்லாதவர் வங்கி கணக்கில் ரூ.4 கோடி பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளை சேர்க்க இணையதளத்தில் மத்திய அரசு சில எளிய மாற்றங்களை செய்தது. அதனை பயன்படுத்தி வேளாண் துறை அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை திருடி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை கடலூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரத்து 752 விவசாயிகள், கிசான் நிதி உதவி திட்டத்தில் சேர்ந்தனர். இதில் பெரும்பாலானவர், விவசாயிகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வேளாண்துறை அதிகாரிகள் கண்காணிப்பு குழு, வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில், விவசாயிகளின் வங்கி கணக்கு வைத்துள்ள 226 வங்கி கிளைகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தற்போது வரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பணியாற்றிய 10 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

SOURCE

More News

இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்

admin See author's posts

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

admin See author's posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

admin See author's posts

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

admin See author's posts

பாமக தேர்தல் அறிக்கை!

admin See author's posts

அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய இந்திய கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

admin See author's posts

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

admin See author's posts

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

admin See author's posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்

admin See author's posts

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

admin See author's posts

Leave a Reply