26th October 2021

பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை (6ம் தேதி) முதற்கட்ட வாக்குப்பதிவும், வரும் 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றோடு முடிவடைந்துவிட்டன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த 9 மாவட்ட பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். எனவே, 5, 6 மற்றும் 8, 9 ஆகிய நாட்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page