லாரியை முந்தியபோது… பேருந்தில் பாய்ந்த மின்சாரம்! – 4 பேரை பலி கொண்ட சோகம்

திருவையாறு அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து திருவையாறு வழியாக தனியார் பேருந்து ஒன்று தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் பஸ்ஸில் ஒரளவிற்கு கூட்டம் இருந்தது. இந்நிலையில் திருவையாறு அருகே உள்ள மணத்திடல் வரகூருக்கு இடையே பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

பேருந்தில் பாய்ந்த மின்சாரம்

அப்போது பேருந்துக்கு முன்னதாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை முந்துவதற்காக டிரைவர் பேருந்தை வேகமாக ஓட்டினார். இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையோரம் முழுவதும் மழை நீர் தேங்கி சகதியாக இருந்தது.

லாரியை முந்தி சென்ற போது நிலை தடுமாறிய நிலையில் பேருந்து அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. அப்போது தாழ்வாக, சென்ற மின் கம்பி பேருந்தில் உரசி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தின் முன் பக்கம் இருந்த பயணிகள் சிலரது உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்த பயணிகள் அனைவரும் அலறித் துடித்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் 3 ஆண்கள், ஒரு பெண்கள் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்ததில் மேலும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பாய்ந்த மின்சாரம்

பேருந்தில் வந்த பயணி ஒருவர், `பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பஸ்ஸில் வந்தேன். லாரியை முந்த முயன்றதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் கருகி உயிரிழந்து விட்டனர். பாதிப்புகள் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் இது போன்ற பெரும் துயரத்தில் சிக்கியது கடுமையான மன வலியை ஏற்படுத்திவிட்டது” என கதறியதை பார்த்து பலரும் கண் கலங்கியதாக விபத்து நடந்த இடத்திலிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பொங்கல் கொண்டாட்டத்தையும் தாண்டி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source: https://www.vikatan.com/news/accident/4-persons-died-because-of-electric-shock-passed-inside-bus

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts