உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் தனது 65 ஆடுகளை, செவ்வாய்க்கிழமை மாலை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று, இரவு தனது வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை விடிய விடியப் பெய்தது. அதிகாலை திடீரென மின்னலுடன் இடி தாக்கியதில் அந்தக் கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 65 ஆடுகளும் கருகி உயிர் இழந்தன.

இதைப்பார்த்த ராமச்சந்திரனின் தாய் நல்லிமை, ஆடுகளைக் காப்பாற்றச் சென்றபோது கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த மரம் அவர் மீது விழுந்ததில் அவரது முதுகுப் பகுதியில் தீ காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.

SOURCE

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts